பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.
கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டமீம் இக்பால் 78 ஓட்டங்களையும் மிதுன் ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மிட்செல் சான்ட்னர் 2 விக்கெட்டுகளையும் போல்ட், மெட் ஹென்ரி மற்றும் ஜேமீசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 272 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, 48.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 275 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டொம் லதம் ஆட்டமிழக்காது 110 ஓட்டங்களையும் டேவோன் கோன்வே 72 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், முஷ்டபிசுர் ரஹ்மான் மற்றும் மெயிடி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 108 பந்துகளில் 10 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 110 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட டொம் லதம் தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, எதிர்வரும் 26ஆம் திகதி வெலிங்டனில் நடைபெறவுள்ளது.