பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நேற்றிரவு (17) நடைபெற்ற, இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டி20 போட்டி மழையின் குறுக்கீட்டினால் கைவிடப்பட்டது.
மழையினால் ஆட்டம் தடைபட்டதைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் தலா ஒன்பது ஓவர்கள் கொண்ட போட்டியாக இது மாற்றப்பட்டது.
இந்திய அணியின் இன்னிங்ஸ் 7.4 ஓவர்களில் 118/5 என்ற நிலையில் முடிவுக்கு வந்தது.
இதில் இஷான் கிஷன் (10 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்கள்; 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) மற்றும் நமன் தீர் (6 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டம்; 1 பவுண்டரி, 3 சிக்ஸர்கள்) ஆகியோர் அதிரடியாக விளையாடினர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷமார் ஸ்பிரிங்கர் மற்றும் கீமோ பால் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாகச் செயல்பட்டனர்.
இந்த முடிவின் அடிப்படையில் முன்னதாக தொடர் 2-2 என சமநிலையில் இருப்பதால், இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் கிண்ணத்தைப் பகிர்ந்து கொள்கின்றன.

















