மட்டக்களப்பு- வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்தில் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டே இந்த எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றுள்ளது.
மேலும் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த பக்தர்களுக்கு, உருத்திராட்ச மாலையை ஆலய நிர்வாகத்தினர் வழங்கியுள்ளனர்.
எதிர்வரும் புதன்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடத்தப்பட்டு எதிர்வரும் மே 18 ஆம் திகதியன்று சங்காபிஷேகம் மற்றும் பாற்குட பவணி நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.