இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினருக்கும், கிளிநொச்சி ஊடகவியலாளர்களிற்குமிடையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட நட்புறவு கலந்துரையாடல் இடம்பெற்றது.
கிளிநொச்சி ஊடக மையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ் சிங்கள ஊடகவியலாளர்களிற்கிடையிலான நட்புறவை அதிகரித்தல், ஊடக தொழில்துறைசார் விடயங்களை மேம்படுத்தல், தமிழ் சிங்கள இன நல்லிணக்கத்தை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதன் போது தமிழ் சிங்கள் இளம் ஊடகவியலாளர்களிற்கு 2ம் மொழி அறிவினை மே்படுத்தல், தமிழ், சிங்கள, இஸ்லாமிய ஊடகவியலாளர்களை தெற்கு மற்றும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளிற்கு சென்று நட்புறவை வளர்த்தல், தமிழ் சிங்கள மக்களின் அடி்ப்படை பிரச்சினைகளை அடையாளம் கண்டு இரு தரப்பினருக்குமான உண்மை நிலையை தெளிவுபடுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் உள்ளிட்ட திட்டங்கள் ஆராயப்பட்டு அவற்றை நடைமறைப்படுத்தவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை பெண் ஊடகவியலாளர்களின் தொழில்துறைசார் சவால்களை அடையாளம் கண்டு அவர்களையும் ஊடக துறையில் செயற்படுதவத்றகான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் தீர்மானம் எட்டப்பட்டது.
அரசியல், இனப்பிரச்சினைகள் கடந்து அனைத்து இன மத ரீதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக நல்லதொரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
குறித் விடயங்கள் தொடர்பில் தமிழ், சிங்கள், இஸ்லாமிய ஊடகவியலாளர்கள் மத்தியில் புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவதன் ஊடாக அனைத்து இனங்களும் ஒற்றுமையுடன் நாட்டில் வாழ்வதற்காக அத்திவாரத்தை ஊடகவியலாளர்களின் மத்தியிலிருந்து ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இன்றைய தினம் வெளிக்கொண்டு வரப்பட்டது.
அதற்கான வேலைத்திட்டங்களை இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினருக்கும் கிளிநொச்சி ஊடகவியலாளர்களும் இணைந்து மெற்கொள்ளது நிர்மானிக்கப்பட்டது.
அதற்கு அமைவாக் தமிழ் இளம் ஊடகவியலாளர்களிற்கு சிங்கள மொழியையும், சிங்கள ஊடகவியலாளர்களிற்கு தமிழ் மொழியையும் 2ம் மொழியாக கற்பிப்பதற்கும்.
மொழி ரீதியில் புரிந்துணர்வை ஏற்படுத்தி ஊடகவியலாளர்களிற்கிடையில் நட்பினை அதிகரிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டது.
அதற்கான வேலைத்திட்டங்கள் விரைவாக முன்னெடுக்க முடியும் எனவும் இரு தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்படவும் தீர்மானம் எட்டப்பட்டது.
குறி்த்த கலந்துரையாடலில் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவைர், செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் களத்திலிருந்து பணிபுரியும் ஊடகவியலாளர்களும் பங்கு கொண்டனர்.