கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னும் குறைவடையாத நிலையில் மக்கள் பொறுப்பற்ற விதமாக செயற்படுகின்றனர் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “பெரும்பாலான மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் செயற்படுகின்றமையினால், புது வருட புத்தாண்டிற்கு பின்னர் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்துக்கு உள்ளாக கூடிய நிலைமைக்கு தள்ளப்படுவர்.
மேலும், பண்டிகைக் காலத்தில் வேறு பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கு எழுமாறாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.
குறித்த பரிசோதனை செய்யும் இடங்கள் தொடர்பாக வெளிப்படுத்தாமல் இருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்துவது தொடர்பாக உறுதியான தீர்மானம் எவையும் மேற்கொள்ளப்படவில்லை” என அச்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.