இலங்கையில் தீவிரவாத செயற்பாடுகளுக்கான தடைகளை தொடர்ந்து சர்வதேச வருகை மற்றும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். உட்பட 11 பயங்கரவாத குழுக்களை தடை செய்யும் நடவடிக்கையை இலங்கை ஆரம்பித்த நிலையில் இந்த அச்சுறுத்தல் உணரப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் குறித்த தடையை அடுத்து ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் தொடர்பாக அனைத்து மாநில ஆணையர்கள் மற்றும் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து மத அடிப்படைவாதிகள் விமானம் அல்லது கடல் வழியாக சட்டவிரோதமாக குடியேறுவதற்கான வாய்ப்பு குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் மத அடிப்படைவாதிகள் தமிழ்நாட்டில் தளம் அமைப்பதைத் தடுக்க உளவுத்துறையை பலப்படுத்தவும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த வாரம், தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பாக அல்கொய்தா, ஐ.எஸ். உள்ளிட்ட 11 குழுக்களை தடை செய்ய சட்டமா அதிபர் அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.