முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் விடுதலையினை வலியுறுத்தி, மௌலவி ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) காலை, வவுனியா- கண்டிவீதியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் தொடர்பாக மௌலவி கூறியுள்ளதாவது, ”எந்ததொரு முறையான ஆவணங்கள் எவையும் சமர்ப்பிக்காமல் பொய்யான காரணங்களை கூறி கைது செய்தமையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
கடந்த 2 வருடங்களாக ஒரே குற்றச்சாட்டினை ரிசாட் மீது முன்வைத்து வருகின்றனர். அவர் கொலை செய்யக் கூடிய ஒருவர் அல்ல. ஆகையினால் அவரை வெளியில் விட்டு புலனாய்வு துறையின் ஊடாக நீதியான விசாரணையை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.
இதன்போது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய தண்டனையை வழங்குங்கள். ஆகவே ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதுவரை தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.