நாட்டில் சிறுபான்மையின மக்கள், அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக உணர்ந்தால், எமது நாட்டின் தேசியப் பாதுகாப்பை உறுதிய செய்ய முடியாது போய்விடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஆகவே அந்தத் தரப்பினரின் குரலுக்கும் செவிசாய்க்க வேண்டும் என்றும் விசேடமாக ஒரு மித்த நாட்டுக்குள் 13 ஆவது திருத்தச்சட்டத்தை இதேபோன்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
சிறுபான்மையினருக்கும் ஏனைய மதத்தினருக்கும் சம உரிமையை வழங்க வேண்டும் என குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண வேண்டும் என்றும் கூறினார்.
இதன் ஊடாகவே நாம் பெற்றுக் கொண்ட சமாதானத்திற்கு முழுமையாக அர்த்தம் கிடைக்கும் என்றும் இதுவே நாம் பெற்றுக் கொண்ட வெற்றியும் நிலைத்து நிற்கும் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.