தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16 இலட்சத்து 99 ஆயிரத்து 225 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 365 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 18,734 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 23 ஆயிரத்து 863 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 14,26,915 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 2,53,576 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.