இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உச்சத்தை எட்டியிருந்த நிலையில் தற்போது கணிசமாக குறைவடைந்துள்ளது.
இதன்படி நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 3 ஆயிரத்து 880 தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 87 ஆயிரத்தை கடந்துள்ளது.
அத்துடன் நேற்று ஒரேநாளில் 2 இலட்சத்து 76 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். இதனையடுத்து தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 57 இலட்சத்து 71 ஆயிரத்தை கடந்துள்ளது.
இவர்களில் 2 கோடியே 23 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 31 இலட்சத்து 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவ்வாறு சிகிச்சைப் பெறுபவர்களில் 8 ஆயரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.