கொழும்பில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டன.
அதன்படி, கொழும்பு – கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் மஹவத்த வீதி, 233 தோட்டம் ஆகிய பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதேபோல, மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என அவர் அறிவித்துள்ளார்.
அதன்படி, 6 மாவட்டங்களை சேர்ந்த 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் 8 கிராம சேவகர் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் 9 கிராம சேவகர் பிரிவுகளும் களுத்துறை மாவட்டத்தின் 16 கிராம சேவகர் பிரிவுகளும் மாத்தளை மாவட்டத்தில் 3 கிராம சேவகர் பிரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் ஒரு கிராம சேவகர் பிரிவும் வவுனியா மாவட்டத்தில் ஒரு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.