2026 ஆம் ஆண்டின் முதல் 25 நாட்களில் இலங்கையில் 1,375 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன.
இதில் 147 விபத்துக்கள் 155 நபர்களின் உயிரைப் பறித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இது நாட்டில் வீதிப் பாதுகாப்பு குறித்த தொடர்ச்சியான கவலைகளை எடுத்துக்காட்டுகிறது.
குறிப்பாக உச்சகட்ட பயணக் காலங்கள் மற்றும் விடுமுறைக் காலங்களின் போது, இலங்கையின் வீதிகளில் தொடர்ந்து ஏற்படும் ஆபத்துகளை இந்த புள்ளிவிவரங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுவதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார்.
அதிக வேகம், குடிபோதையில் வாகனம் செலுத்துதல் மற்றும் அடிப்படை போக்குவரத்து விதிகளைப் பின்பற்றத் தவறுதல் ஆகியவை விபத்துக்கு முக்கிய காரணங்களாகத் தொடர்கின்றன என்று போக்குவரத்து அதிகாரிகள் பலமுறை எச்சரித்துள்ளனர்.
விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் கடுமையான தண்டனைகள் இருந்தபோதிலும் விபத்துக்கள் தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்ற நிலை காணப்படுகின்றது.













