இந்திய நுகர்வோருக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் பன்னாட்டு நிறுவனங்கள் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதாக இந்திய உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேலைத்தேய நாடுகளில் பின்பற்றப்படும் உணவுத் தரநிலைகள் இந்தியாவிலும் பின்பற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் ஊட்டச்சத்து மற்றும் உள்ளடக்க விபரங்களை நுகர்வோர் அறிந்துகொள்ளும் வகையில், பொதியின் முன்பக்கத்தில் ஊட்டச்சத்து எச்சரிக்கை விபரங்களைக் குறிப்பிட இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், எச்சரிக்கை அடையாளங்களின் தாக்கத்தைக் குறைப்பதற்காக உணவுப் பொருட்களின் கலவையை மறைமுகமாக மாற்றவோ, செயற்கைப் பாதுகாப்புப் பொருட்கள் மற்றும் சேர்க்கைகளைப் பயன்படுத்தவோ கூடாது என்றும் பன்னாட்டு உணவு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
















