• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த வரவு செலவுத் திட்டம் தொடர்பான உச்சிமாநாட்டில் இணக்கப்பாடின்றி முடிவு

Summit on the European Union’s next budget concludes without an agreement

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/27
in உலகம், ஐரோப்பா
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இணக்கப்பாட்டை எட்டுவதற்காக விசேடமாகக் கூட்டப்பட்ட இந்த உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இரு அணிகளாகப் பிரிந்து தங்களது நிலைப்பாடுகளில் உறுதியாக இருந்தனர். இதனால், எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒப்பந்தமொன்றை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா முன்வைத்த 1.78 ட்ரில்லியன் யூரோ மதிப்பிலான ஏழாண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கும் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இது ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட திட்டத்தை விட 10 சதவீதம் குறைவான தொகையாகும்.

வரவு செலவுத் திட்டத்தைக் குறைக்க வலியுறுத்தும் ஏழு நாடுகள் ஒரு அணியாகவும், பிராந்திய அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகளில் மேலதிகக் குறைப்புகளை எதிர்க்கும் 17 நாடுகள் மற்றொரு அணியாகவும் செயற்பட்டன.

இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். நெதர்லாந்து பிரதமர் ரொப் யெட்டனும் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், டிசம்பர் 31ஆம் திகதிக்குள் ஒப்பந்தமொன்று எட்டப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அதற்குப் பின்னர் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்தார். கோஸ்டா முன்வைத்த வரவு செலவுத் திட்டக் குறைப்புகளை அவர் மூலோபாயத் தவறு என விமர்சித்தார்.

ஜேர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸும் முன்மொழியப்பட்ட தொகையை மேலும் குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் பேச்சுவார்த்தையில் மேலும் வெளிப்பட்டன.

இந்த உச்சிமாநாட்டில் ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் சில நாடுகளின் புறக்கணிப்பு நடவடிக்கைகளால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த வரவு செலவுத் திட்டம் தொடர்பான இணக்கப்பாட்டை எட்டுவதில் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது.

இதேவேளை, ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொண்டுவரும் உக்ரைனுக்கு 45 பில்லியன் யூரோ ஆதரவு கடனுதவி வழங்குவது குறித்தும் இந்த உச்சிமாநாட்டில் கலந்துரையாடத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், வரவு செலவுத் திட்டம் தொடர்பான முரண்பாடுகள் மேலோங்கியதால், உக்ரைனுக்கான உதவி தொடர்பான விவகாரம் போதிய கவனம் பெறவில்லை.

Related

Tags: Summit on the European Union’s next budget concludes without an agreement
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்திய உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி

Next Post

துறைமுக நுழைவாயில் மேம்பால வீதி அதிவேக நெடுஞ்சாலையாகப் பிரகடனம்

Related Posts

இந்திய உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி
ஆசியா

2026-11-27
பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும்  இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் அலெக்சாண்டர்
இங்கிலாந்து

பிரித்தானியாவில் 2.5 இலட்சம் குடும்பங்களுக்கு நீர்க்கட்டணச் சலுகை

பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றிய உணவு வர்த்தக ஒப்பந்தம்: சிறு, நடுத்தர நிறுவனங்கள் வரவேற்பு

பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த மேலும் 180 மில்லியன் பவுண்ஸ்  நிதி ஒதுக்கீடு

2026-11-26
புதிய ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் மீதான முதல் வாக்கெடுப்பு அடுத்த மாதம்
இங்கிலாந்து

புதிய ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் மீதான முதல் வாக்கெடுப்பு அடுத்த மாதம்

2026-11-26
Next Post
துறைமுக நுழைவாயில் மேம்பால வீதி அதிவேக நெடுஞ்சாலையாகப் பிரகடனம்

துறைமுக நுழைவாயில் மேம்பால வீதி அதிவேக நெடுஞ்சாலையாகப் பிரகடனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
துறைமுக நுழைவாயில் மேம்பால வீதி அதிவேக நெடுஞ்சாலையாகப் பிரகடனம்

துறைமுக நுழைவாயில் மேம்பால வீதி அதிவேக நெடுஞ்சாலையாகப் பிரகடனம்

0
ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த வரவு செலவுத் திட்டம் தொடர்பான உச்சிமாநாட்டில் இணக்கப்பாடின்றி முடிவு

ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த வரவு செலவுத் திட்டம் தொடர்பான உச்சிமாநாட்டில் இணக்கப்பாடின்றி முடிவு

0
இந்திய உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி

இந்திய உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி

0
ஜனவரி 4ஆம் திகதி ஆரம்பமாகும் 2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை

‘உலக இளைஞர்களின் எழுச்சி நாயகன்’ கௌரவப் பட்டம் ‘இளைய அப்துல் கலாம்’ டாக்டர் ஐ. ஜெகனுக்கு வழங்கி கௌரவிப்பு

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: