வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் கோப்பாய், கொடிகாமம், எள்ளங்குளம், உடுத்துறை மற்றும் சாட்டி ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன், நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்திலும் விசேட அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில் மற்றும் தேராவில் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டன.
தருமபுரம்
இதேவேளை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு தருமபுரம் பகுதியில் இன்று நடைபெற்றது.















