தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 148 வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார்.
சென்னையிலிருந்து காணொளி வாயிலாக இந்தத் திறப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அத்துடன், முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான மாதாந்திரப் பணக்கொடையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, குடும்பத் தலைவருக்கான கொடுப்பனவு ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து ஆயிரத்து 800 ரூபாயாகவும், ஏனைய வயது வந்த உறுப்பினர்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து ஆயிரத்து 200 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கொடுப்பனவும் 500 ரூபாயிலிருந்து 600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் 19 ஆயிரத்து 710 குடும்பங்களைச் சேர்ந்த 56 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் பயன்பெறவுள்ளனர்.

















