பதுளை மாவட்டத்திலுள்ள ஹப்புத்தளை, கல்கந்தவிலுள்ள சில மலைப்பாங்கான பகுதிகளில் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் அதிகளவு காணப்படுவதாக பிரதேச செயலாளர் சுனில் அபேகோன் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக ஹப்புத்தளை பிரதேச சபையின் தவிசாளர் கந்தசாமி கண்ணா, ஹப்புத்தளை பிரதேச செயலாளர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆராய்ந்துள்ளனர்.
இதன்போது சில பகுதிகளில் கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளமையை அவதானித்துள்ளதுடன் இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதனையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன்போது சில கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளதாகவும் இதனால் எவருக்கும் எந்தவித பாதிப்புகளும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் குறித்த பகுதியில் 60 பேர் வரை வசித்து வருகின்றமையினால் அவர்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு பிரதேச செயலாளர் சுனில் அபேகோன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ஹப்புத்தளை – கொழும்பு பிரதான வீதியில் பயணிப்போரும் மிகவும் அவதானதத்துடன் செயற்படுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மாத்தளை-வில்கமுவ, லக்கம, பல்லேகம, ரிவஸ்டன் பிரதேச செயலாளர் பிரிவுகள் ,பதுளை- ஹல்தமுல்ல பிரதேச செயலாளர் பிரிவு, நுவரெலியா- கொத்மலை, அம்பகமுவ, நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவு ஆகியவற்றுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.