நாட்டில் நேற்று மட்டும் 2,976 பதிவாகியுள்ள நிலையில் மாவட்ட ரீதியான விபரத்தை தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது.
அதன்படி நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகளவிலானவர்கள் அதாவது 805 பேர் கம்பஹாவில் பதிவாகியுள்ளன.
மேலும் கொழும்பில் 589 பேரும் களுத்துறையில் 300 பேரும் நுவரெலியாவில் 128 பேரும் 112 யாழ்ப்பாணத்தில் பேரும் அனுராதபுரத்தில் 107 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காலியில் 98 பேருக்கும் கண்டியில் 97, இரத்தினபுரியில் 94, வவுனியாவில் 85, குருநாகல் மற்றும் கேகாலையில் தலா 79 பேருக்கும் மட்டக்களப்பில் 73 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டையில் தலா 60 பேரும் மாதுளையில் 51 புத்தளத்தில் 34 பேரும் அம்பாறையில் 32, முல்லைத்தீவில் 26 பேரும் கிளிநொச்சியில் 21 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பதுளையில் 14 மொனராகல மற்றும் மாத்தறையில் தலா 10 பேருக்கும் திருகோணமலையில் 09 பேருக்கும் மன்னாரில் மூவருக்கும் இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.