முல்லைத்தீவிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மன்னார் மடு திருத்தலத்திற்கான பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதை அடுத்து பலர் இவ்வாறு பாத யாத்திரையினை முன்னெடுத்துள்ளனர்.
சுகாதார விதிமுறைக்கு அமைவாக இந்த பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையினை கருத்தில் கொண்டு மடுத்திருத்தலத்திற்கு பாதை யாத்திரையாக வருவதனை நிறுத்துமாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
குறிப்பாக மடுத்திருத்தலத்திற்குள் நுழைவதற்கு எந்தவொரு பக்த அடியார்களுக்கும் அனுமதி வழங்கப்படாது எனவும் அவர் அறிவித்திருந்தார்.
இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்தநிலைமைகளை கருத்தில் கொண்டே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததாக மன்னார் மறைமாவட்ட ஆயர் அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.