மன்னார்- தலைமன்னார் பகுதியிலுள்ள ஆறு கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த மக்களின் அத்தியாவசிய உணவு தேவையை அடிப்படையாக கொண்டு, உணவு பொருட்களை இலகுவாக பெற்று கொள்ளும் முகமாக பலநோக்கு கூட்டுறவு சங்க கிளை நேற்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் நகர் பிரதேச செயலாளர் ம.பிரதீப் தலைமையில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஏ.ஸ்ரான்லி டிமேல் மற்றும் கூட்டுறவு சங்க உதவி ஆணையாளர் பரின் கஹான அப்துல் சமீயூ ஆகியோரின் பங்குபற்றுதலுடன் பலநோக்கு கூட்டுறவு சங்க கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச செயலக பிரிவில் நீண்ட நாட்களாக செயற்பாடுகள் இன்றி காணப்பட்ட பல நோக்கு கூட்டுறவு சங்கங்களை மீள் உருவாக்கும் முகமாகவும் கொரோனா காலப்பகுதியில் மக்கள் இலகுவாக கட்டுப்பாட்டு விலைக்கு அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளும் நோக்குடனும் இந்த பலநோக்கு கூட்டுறவு சங்க கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.