சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
2020 ஆண்டுக்கான சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கமைய, ளு சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி நாடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், குறித்த கூட்டத்தில் ஆப்கானிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தி தலிபான்கள் கலந்துகொள்ள வேண்டுமென பாகிஸ்தான் கோரிக்கை விடுத்திருந்தது.
குறித்த கோரிக்கையினை பெரும்பாலான உறுப்பு நாடுகள் ஏற்று கொள்ள மறுத்தமை காரணமாக சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
தலிபான்கள் பங்கேற்பதற்கு உறுப்பு நாடுகளின் அனுமதி இல்லாமை காரணமாக கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நேபாள வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேபாள வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.