இலங்கை அரசாங்கம் ஜனநாயகமான நாடு என்பதை எடுத்து காட்ட வேண்டும் எனில் யுத்த குற்ற விசாரணைகள் அவசியம் என இலங்கை வம்சாவளியான நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் ஹம்சாயினி குணரத்தினம் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த போர்க்குற்ற விசாரணை உள்ளகப்பொறிமுறையுடன் இடம்பெறக்கூடாது என்றும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பெரும்பான்மையினருக்கும் இருக்கிறது என்றும் ஹம்சாயினி குணரத்தினம் சுட்டிக்காட்டினார்.
மேலும் இலங்கையைப் புறக்கணிப்பதில் எவ்வித பலனும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், முதலீடுகளை மேற்கொண்டால் மட்டுமே வேலைவாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை அழைப்பு விடுக்கப்பட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவும் தயாராக இருப்பதாகவும் ஹம்சாயினி குணரத்தினம் கூறினார்.
வர்த்தகம், கல்வி மற்றும் பிற வழிகளில் நோர்வே இலங்கைக்கு தொடர்ந்து உதவ வேண்டும் என்றும் இந்த விடயம் தொடர்பாக நோர்வே வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கையில் உள்ள நோர்வே தூதுவர் ஆகியோருடன் கலந்துரையாடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.