இந்தியாவுடன் பகைத்தாலும் மக்களை பாதுகாக்கவேண்டும்,எங்களது வளங்களை வளர்த்தெடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக கடற்தொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை நிறுத்துவதற்கு எமது அரசாங்கம் சகல முயற்சிகளையும் எடுத்துவருகின்றது.ஜனாதிபதி ,பிரதமர் ஆகியோர் எங்களுக்கு முழு ஆதரவு வழங்குகின்றனர்.
இந்தியாவுடன் பகைத்தாலும் எமது மக்களை பாதுகாக்கவும் வளங்களை வளர்த்தொடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் உள்ளனர்.
விரைவில் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதன் பின்னர் நான் மட்டக்களப்புக்கு வருகைதந்து இங்குள்ள பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவேன்.
சஜித் பிரேமதாச தனது தேர்தலுக்காக வீட்டுத்திட்டம் என்ற ஒன்றை பயன்படுத்திக்கொண்டார்.மக்களுக்கு கொஞ்சகொஞ்ச காசை வழங்கி வாக்கினை அபகரிக்க நினைத்தார் முடியவில்லை.எங்களது கஜனா காலியாகவுள்ளது.
கைவிடப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்திற்கான மிகுதி பணத்தினை வழங்கக்கூடிய நிலையில்லை.இது மட்டக்களப்பில் மட்டுமன்றி முழுநாட்டுக்குமான பிரச்சினை.
தற்போது இந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பானது தற்காலிகமானது.எவ்வாறு இந்த நாட்டில் இருந்த வன்முறைக்கு தீர்வுகண்டாரோ,இந்த நாட்டில் ஏற்பட்ட கொரனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்தினாரோ அதேபோன்று இந்த பொருளாதார,மக்களின் வாழ்வாதார பிரச்சினையையும் தீர்த்துவைப்பார் என்று நம்புகின்றோம்.
இராஜாங்க அமைச்சர் லொஹாத் ரத்வத்தை விவகாரம் தவறுகள் எங்கும் நடக்கின்றது.இதனை எல்லா இயக்களும் எல்லாரும் செய்த செயற்பாடுதான்.அதனை நாங்கள் பெரிதுபடுத்தமுடியாது.
இது அரசாங்கத்தின் கொள்கையில்லை.அது தனிமனித விவகாரம். அவர் அவ்வாறு நடந்துகொண்டாரா இல்லையா என்பதையறிய விசாரணை நடைபெற்றுவருகின்றது.அதன் பின்னரே அது உண்மையா பொய்யா என்பது தெரியும்.
2013ஆம்ஆண்டில் பல்கலைக்கழக ஆசிரியர் குழு என்னும் அமைப்பு ஒரு குறிப்பிட்ட பெண்மணியின் பெயரைக்கூறி இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு தாக்கப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர் அவர் அழைத்துச்செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு கூறியிருந்தது.அந்த அமைப்பு தற்போது குறித்த பெண் உயிருடன் உள்ளதாக சொல்லப்போகின்றார்கள்.இவ்வாறு பல பொய்பித்தலாட்ட செயற்பாடுகள் உள்ளன.