ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளனர்.
26வது காலநிலை மாற்ற மாநாடு (COP26) இங்கிலாந்து அரசாங்கத்தால் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் ஒக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை நடத்தப்படும்.
உலகத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கிளாஸ்கோவில் காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் முயற்சியில் கூடவுள்ளனர்.
பெரும்பாலான நாடுகள் பிரதிநிதித்துவம் செய்யும் சுமார் 25,000 அங்கீகாரம் பெற்ற பிரதிநிதிகள் இந்த உச்சிமாநாட்டில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.