சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை உடனடியாக வழங்குமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் குழுவுடன் நேற்று (திங்கட்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த பணிப்புரையை வழங்கினார்.
கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும், ஏலம் விடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கும் அவகாசம் கோரும் போது, தாங்கள் சிக்கலை எதிர்கொள்வதாக தொழில்முனைவோர் பிரதமரிடம் எடுத்து கூறினர்.
விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் அதனூடாக மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத்தில் ஏற்படும் தாக்கம் மற்றும் வர்த்தகர்களின் வறையரை வரம்பற்ற விலை உயர்விலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பது குறித்தும் பிரதமரினால் கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாத்துறை, வெதுப்பகத் தொழில், பூஞ்செடி விற்பனை, வாகனப் உதிரிப் பாகங்கள் இறக்குமதி, ஆடை மற்றும் மாணிக்கக்கல் வர்த்தகம், உலோகப் பொருட்கள் உற்பத்தி மற்றும் மெனிங் சந்தை பிரச்சினை மற்றும் கட்டுமானத் தொழிற்துறை ஆகியவற்றை பாதித்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக வர்த்தகர்கள் இதன்போது கருத்துகளை முன்வைத்தனர்.
குறித்த பிரச்சினைகளுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் அச் சந்தர்ப்பத்திலேயே அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்றார்என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.