மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவில் வெள்ள அச்சுறுத்தலுக்கான நிலைமைகள் இல்லையெனவும் மக்கள் அச்சம்கொள்ளத்தேவையில்லையெனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
சில கிராமங்களில் சில பொது அமைப்புகள் பாரிய தாக்கம் ஏற்படும் என்ற ரீதியில் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவுறுத்தல்களை வழங்கிவருவதாகவும் வீணான வதந்திகளை நம்பாமல் திணைக்களங்களின் தகவல்களைப்பெற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசன திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் பொறியலாளர் நாகரத்தினம்,மாவட்ட அனர்த்த முகாமைத்து திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் ஏ.எம்.எஸ்.சியாட் ஆகியோர் இதன்போது மாவட்ட வெள்ள நிலைமைகள் குறித்தான தகவல்களை வழங்கினார்கள்.