திருகோணமலை சீனக்குடா எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது
திருகோணமலை பிரதான பஸ் நிலையத்திற்கு நேற்று (புதன்கிழமை) முன்னால் கிழக்கு மக்களின் குரல் அமைப்பினால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாட்டை விற்காதே,அரசாங்கமே தேசத்தின் சொத்துக்களை விற்றுத் தின்னாதே, ,டொலர் இல்லையென்றால் எண்ணைக்குத்தங்கள் மூலம் நாட்டிட்க்கு வருமானத்தை அதிகாரி மற்றும் தேசிய சொத்துக்களை கூறுபோடாதே சுலோகங்களை ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மக்கள் குரல் அமைப்பாளரும்,மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான சட்டத்தரணி அருன் ஹேமச்சந்திரா
திருகோணமலை சீனக்குடா எண்ணெய் குதங்களை இந்திய நிறுவனத்திற்கு விற்கப்படும் என எரிபொருள் எரிசக்தி அமைச்சர் கூட ஏற்றுக்கொண்டுள்ளார் உண்மையிலேயே இந்த நாட்டின் விலைமதிக்க முடியாத சொத்துக்களான இந்த எண்ணெய் தாங்கிகளை விற்ப்பது என்ற விடயத்தை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் எனவும்
இந்த மண்ணிற்கு கடமை பட்டுள்ள அனைவரும் இந்த விற்பனைக்கு எதிராக நாங்கள் அணி திரள வேண்டும் என்ற கட்டாயத்திட்க்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் எந்தவொரு மதிப்பீடும் செய்யாமல் விலை மதிப்பற்ற இந்த சொத்துக்களை விற்க முன் வருவது நிச்சயமாக கண்டிக்கத்தக்க விடயமாகும்
அதாவது இந்த அரசாங்கத்தை பொறுத்தவரை தங்கள் நாட்டின் எந்த தேசிய சொத்துக்களையும் விற்கப் போவதில்லை அது மாத்திரமல்லாமல் கடந்த அரசாங்கத்தில் விற்கப்பட்ட சொத்துக்களை மீள பெற்றுக்கொண்டிருப்பதக்கவும் கூறி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று இருந்தார்கள் இந்நிலையில்
கடந்த 2003ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் காலத்தில் குறிப்பாக சந்திரிகா பண்டார நாயக்க ஆட்சி காலத்தில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தமானது காலாவதியான நிலையில் மீண்டும் 50 வருட காலங்களுக்கு இந்திய நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்படுவது எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் எனவும் தெரிவித்த அருண் ஹேமச்சந்திர
குறிப்பாக நாட்டில் நிலவுகின்ற டொலர் பற்றாக்குறைக்கு இவ்வாறு குத்தகைக்கு வழங்கப்படுகின்ற இன்னைக்கு தங்களை சரிவர புனரமைத்து இந்த எண்ணெய் டாங்கிகள் ஊடாக இலங்கையின் வர்த்தகத்தை அதிகரித்து பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் உலக வரைபடத்தில் மிகவும் முக்கியமான வர்த்தகத்திற்கான கடல் வழி பாதையாக திருகோணமலை காணப்படுகின்றது மேலும் திருகோணமலையில் இருப்பிடமான பல உலக வல்லரசு நாடுகளின் பார்வையில் இருக்கின்ற கேந்திரம் மிக்க ஒரு இடமாக கருதப்படுகின்ற திருகோணமலை பிரதேசத்தின் இந்த எண்ணெய்க்கு தங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் எனவும் கிழக்கு மக்கள் குரலில் அமைப்பாளர் அருள் ஹேமச்சந்திரா தெரிவித்தார்
எனவே நாம் ஏனைய நாடுகளின் பகடைக்காய்களாக இருக்கக் கூடாது எனவும் எமக்குத் தேவையான சரியான திட்டங்களை நாங்கள் வகுத்துக் கொள்ள வேண்டும் எனவும்
அவ்வாறே இந்த எண்ணெய்த்தாங்கிகளை சீர் செய்திருந்தால் நாட்டின் பொருளாதார பிரச்சனைக்கு பெரும் பங்கு வகிக்கும் எனவும் இதன்போது தெரிவித்தார்
இவ்வாறு இந்தியாவிற்கு வழங்க படவுள்ள எண்ணைக்குத்தங்கள் தொடர்பில் அதட்க்கு எதிராக இரண்டு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் இவ்வாறன செயற்றப்படுகள் கண்டிக்கத்தக்கது அதுமாத்திரமல்ல இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு மோசமான சூழ்நிலை ஏற்படுத்த இந்த அரசாங்கம் பாடுபடுவதாகவும் சீனாவிடற்கு கொழும்பு துறைமுகத்தை வழங்கியதத்திற்கு பதிலாக இந்தியாவை திருப்திப்படுத்த நாட்டும் தேசிய சொத்துக்களை தாரைவார்க்க வேண்டாம் எனவும் இதன்போது கிழக்கு மக்கள் குரல் அமைப்பாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான சட்டத்தரணி அருன் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்றப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டதுடன் இதட்க்கான சரியான தீர்வினை இந்த அரசாங்கம் மேற்றக்கொள்ளவில்லை ஏன்றால் நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் இடம்பெறும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.