தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட தயாமாஸ்டருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை விதித்து வவுனியா மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்த தயா மாஸ்டருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
2009 ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் மே 18 ஆம் திகதி அவரை அப்போது தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பாக குறித்த வழக்கு தொடரப்பட்டது.
இதனை அடுத்து வவுனியா மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு தொடர்ந்தும் இடம்பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.