எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன் இடையில் இன்று நாடாளுமன்றத்தில் கடுமையான வாய்த்தர்க்கம் இடம்பெற்றது.
நாடாளுமன்ற அமர்வுகளை நடாத்திக் கொண்டிருந்த நாடாளுமன்ற பிரதிக் குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதனையும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமதாச கடுமையாக சாடியுள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை, அந்நிய செலாவணி நெருக்கடி உள்ளிட்ட 11 கேள்விகளை நிதி அமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பியிருந்தார்.
மேலும் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நிதி அமைச்சு எடுத்த நடவடிக்கை, பண வீக்கத்திற்கான காரணங்கள் மற்றும் பிற முக்கிய பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்காதமை காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் இடம்பெற்றது.