சர்வதேசத்தின் மத்தியஸ்தம் இன்றி சகல மக்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் அமைப்பை இலங்கை அரசாங்கம் கொண்டுவராது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இதனைத் தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பை கொண்டுவர வேண்டும் என ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிற்கு பின்னர் அனைவரும் முயற்சித்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துள்ள நகர்வும் அரசியலமைப்பு மாற்றம் ஒன்று வரும் என்ற நம்பிக்கையைத் தரவில்லை என கூறினார்.
அரசியலமைப்பு தொடர்பாக நீண்டகால அனுபவத்தை கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் போன்றவர்கள் இருந்தாலும் சகல மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியல் அமைப்பை அரசாங்கம் கொண்டுவராது என சுட்டிக்காட்டினார்.
ஆகவே தமிழர்கள் இனரீதியாக பாதிகப்படும் விடயங்களை வேறு நாடுகள் மத்தியஸ்தம் வகித்து சுட்டிக்காட்டினால் மட்டுமே அது சாத்தியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.