தமிழர்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் இந்தியாவை மீறி ஏனைய நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்தார்.
யாழில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், ஐ.நா.வில் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியமை மன ஆறுதலை தருவதாக கூறினார்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மட்டுமே இந்தியாவினால் வலியுறுத்த முடியும் என்றும் அதனை மீறி அவர்களால் இலங்கை இறையாண்மைக்குள் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என்றும் சரவணபவன் தெரிவித்தார்.
ஏற்கனவே இருக்கும் காணி அதிகாரம் பொலிஸ் அதிகாரம் என்பன மக்களுக்கு கிடைத்திருந்தால் ஜனநாயக வழிகளில் போராட்டத்தை நடத்தி அதற்கு மேலும் கோரியிருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவை மீறி எந்தவொரு நாடும் இதனை வலியுறுத்த முடியாது என்பதனால் அவர்களுடன் இணைந்து இலக்கை அடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரவணபவன் குறிப்பிட்டார்.