‘நாளைய நிலை பேறுக்கான இன்றைய பால்நிலை சமத்துவம்’ எனும் கருப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை ) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
மகளிர் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு,மன்னார் மாவட்டச் செயலகம்,மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம்,மன்னார் மாவட்ட குடி சார் அமைப்புகளின் சம்மேளனம் ஆகியவை ஒன்றிணைந்து சர்வதேச மகளிர் தின நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது நிகழ்வுகள் இடம் பெற்றதோடு மாவட்டத்தின் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது பெண்கள் அமைப்பின் பிரதி நிதிகள்,மாதர்,கிராம அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.