பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியல்கைதிகளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அரசியல்கைதியொருவர் தெரிவித்தார்.
வழக்கொன்றிற்காக இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மூன்று அரசியல் கைதிகள் ஆயுதம் தாங்கிய காவலர்கள் சகிதம் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் வழக்கு நிறைவின் பின்னர் அவர்களை மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லும் பொருட்டு வாகனத்தில் ஏற்றிக்கொண்டும் செல்லும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடியால் அரசியல் கைதிகளும் பல:வெறான பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதனால் தமிழ் மக்கள் அனைவரும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.




