மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி நெருக்கடியை எதிர்நோக்கும் நிலையில் ஜனாதிபதியையும் பிரதமரையும் காணவில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இன்று (04) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், எரிபொருள் மற்றும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல கிலோமீற்றர் தூரம் வரிசையில் நிற்பதாக குறிப்பிட்டார்.
குடிமக்கள் எதிர்கொள்ளும் உணர்ச்சி வலிக்கு சற்று நிவாரணம் தர ஜனாதிபதி குறைந்தபட்சம் ஏதாவது சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக கொண்டு வருவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெற்றலாம் என நினைத்தமை தவறானது என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அவர் தேசியப்பட்டியல் மூலம் மட்டுமே நாடாளுமன்றத்துக்கு வந்த தோல்வியடைந்த வேட்பாளர் என்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளையாட்டை விட்டுவிட்டு நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த ஒன்றிணைந்து சர்வதேச சமூகத்தை அணுக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.