இலங்கை ஆசிரியர்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைதுக்கு எதிராக வவுனியாவில் ஆசிரியர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
காலை.10.30 மணியளவில் பெரும்பாலான பாடசாலைகளில் குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது “ஜனநாயக ரீதியாக உரிமைக்காக போராடிய எமது பொதுச்செயலாளர் முறையற்ற விதத்திலே கைதுசெய்யப்பட்டுள்ளார். அதற்கு எமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அவர் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கின்றோம்.
அத்துடன் இந்தஅரசு அவசரகாலச்சட்டத்தினை உடனடியாக நீக்கி நாட்டில் ஜனநாயக தன்மையை உறுதிசெய்யவேண்டும். தேவையற்ற கைதுகளை தவிர்க்கவேண்டும். எமது பொதுச்செயலாளர் உடனடியாக விடுவிக்கப்படாவிடில் நாம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் என்பதை கூறிக்கொள்கின்றோம்” என்றனர்.
ஆர்பாட்டத்தில் வவுனியா வெளிக்குளம் மகாவித்தியாலம்,இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியலாம்,சைவிப்பிரகாசா மகளீர் பாடசாலை,முஸ்லீம் மகாவித்தியாலம்,தமிழ் மத்திய மகாவித்தியாலம் உட்பட பெரும்பாலான பாடசாலைகளில் குறித்த கண்டன ஆர்பாட்டம் இன்று இடம்பெற்றது.