பொருளாதார வீழ்ச்சியில் வழிவகுத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை ஆனால் சாதாரண மக்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை தற்போதைய சுமையை மக்களால் சுமக்க முடியாது எனவும், இந்த புதிய வரி காரணமாக மீண்டும் மீண்டும் மக்கள் மீது சுமையை ஏற்படுத்துகின்றது என்றும் குறிப்பிட்டார்.
நெருக்கடியை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வரிச்சுமையை சாதாரண மக்கள் மீது சுமத்தி மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த புதிய வரியானது இறக்குமதி, சேவைகள், உற்பத்தி மற்றும் வாங்குதல் மற்றும் விற்பனை ஆகிய அனைத்து துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துவதால்கவும் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.