இருபத்தி ஏழாயிரம் சிறுவர்கள் போசாக்கின்மையினாலும் இரு இலட்சத்து ஏழாயிரம் சிறுவர்கள் போசாக்கின்மையினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் நாட்டில் நிலவும் போசாக்கின்மை நிலை குறித்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாணவர் ஒருவரின் மதிய உணவுக்காக 60 ரூபாய் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த தொகை போதாது எனவும் திருமதி குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.
கடுமையான போசாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணித் தாய்மார்களின் போசாக்கு நிலை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.