கட்சி மற்றும் தொழிற்சங்க பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டால் தோட்டக் கம்பனிகளை நிச்சயம் அடிபணிய வைக்க முடியும் என பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
இதற்கு சிறந்த சான்று, மஸ்கெலியாவில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை போராட்டம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் சுட்டிக்காட்டினார்.
தோட்டத் தொழிலாளர்களை, சிறுதோட்டங்களின் உரிமையாளர்களாக்கி அவர்களை முதலாளி ஆக்குவதே தனது இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த இலக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மலரும் புதிய ஆட்சியில் அடையப்படும் எனவும் அவர் கூறினார்.
தேர்தலுக்கு அஞ்சிநிற்கும் அரசாங்கதிற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தால், தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படும் என பழனி திகாம்பரம் தெரிவித்தார்.