மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் போதை பொருள் வியாபரி ஒருவரின் வீட்டை இன்று (வியாழக்கிழமை) முற்றுகையிட்ட பொலிசார் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள காரியாலயம் ஒன்றில் கடமையாற்றிவரும் 28 வயதுடையவரை 2050 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய பொலிஸ் பலனாய்வு பிரிவினர் குறித்த நபரை கண்காணிப்பில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
இந்த நிலையில் போதை பொருள் வியாபாரியின் வீட்டை மட்டு தலைமையக பொலிஸ் நிலைய சுற்றுச் சூழல் பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜி.எம்.எஜ் கஜநாயக்கா தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர் ரி.கிருபாகரன் உள்ளிட்ட பொலிசார் சம்பவதினமான இன்று காலை 10 மணியவில் முற்றுகையிட்டபோது வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த வியாபாரியை 2050 மில்லிக்கிராம் ஹரோயின் போதை பொருளுடன் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட நபர் மாவட்டத்திலுள்ள கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள காரியாலயத்தில் பணியாற்றிவருவதாகவும் கடந்த இரண்டு மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை எனவும். அவருக்கான சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் அவர் வீட்டில் இருந்து தினமும் வேலைக்கு செல்வதாக தெரிவித்து சென்று வேலைக்கு செல்லாது போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு பின்னர் வேலைமுடிந்து வருவது போல மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளதாகவும்.
வேலைக்கு சென்று சம்பளம் வந்தது போல போதை பொருள் வியாபாரத்தின் ஊடாக கிடைத்த பணத்தை மனைவியிடம் வழங்கிவந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.