சண்டியர்களை கொண்டு மக்கள் போராட்டத்தை முடக்க முயற்சித்தால் பாரதூரமான விளைவுகளே ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும் சண்டியர்களை வெளியேற்றாமல் உரிமைக்காக போராடும் மக்களை காலி முகத்திடலில் இருந்து வெளியேற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் வெட்ககேடானது என்றும் சாடியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உணர்வுபூர்வமாகவும் வெளிப்படைத்தன்மையுடன் உதைபந்தாட்ட போட்டியினை கட்டார் நாட்டின் இளவசர் ஒழுங்குபடுத்தியதாக சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாகவே அங்கு போட்டிகள் சிறப்பாக இடம்பெறுகின்றது என்றும் இதனை சிறந்த உதாணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் அரசராகும் கனவுடன் கடந்த காலத்தில் இருந்த ஒருவரிடம் இவ்வாறான செயற்திட்டம் வழங்கப்பட்டிருந்தால் வங்குரோத்து நிலை அடைந்துள்ள நாட்டில் மிகுதியாக உள்ள வளம் கூட மோசடி செய்யப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.