ஆறுமுகநாவலரின் இருநூறாவது பிறந்ததின நிகழ்வு, இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். வட்டு இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப்புலவர் அரங்கத்தில் நடைபெற்றது.
யாழ். வட்டு இந்துக் கல்லூரியும் சங்கானைக் கல்விக்கோட்டமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் அதிபர் அ.ஆனந்தராஜா அவர்கள் தலைமை தாங்கிய இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீமன் ராகேஷ் நட்ராஜ் அவர்கள் கலந்துகொண்டார்.
கலை கலாச்சார முறைப்பாடி தவில் நாதஸ்வரம் இசைக்க பொம்மலாட்டத்துடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர்.
மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் விருந்தினர்களின் உரைகள், பரிசில்கள் வழங்கல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்தினர், சங்கானை கோட்டக் கல்வி அலுவலகத்தினர், சங்கானை பிரதேச செயலகத்தினர், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், தமிழ் அறிஞர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.