வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாடலுவல்கள் திணைக்களம்,சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தும் ஒளிவிழா நவாலி சென்பீற்றர் தேவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன், புனித பேதுரு பாவிலு ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி J.B அன்ரனிதாஸ் இறையாசி வழங்கியிருந்தார்.
ஒளிவிழா நிகழ்வில் யேசுகிறிஸ்துவின் பாடல்கள், யேசு கிறிஸ்துவின் பிறப்பு நாடகம், பரதநாட்டியம், நாட்டார் கூத்து போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சின் வடக்கு மாகாண பிரதம செயளாலர் திரு இ.வரதீஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக சண்டிலிப்பாய் பிரதேச செயளாலருமான யசோதரா உதயகேமார் அவர்களும், கௌரவ விருந்தினராக சண்டிலிப்பாய் பிரதேச உதவி செய்ளாலர் நேசகுமார் செல்வரட்ணம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்ததனர்.
அத்துடன் இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஜனனம் அறக்கட்டளை முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் முகுந்தகஜன், பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இன்றைய நிகழ்வில், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினரும் ஜனனம் அறக்கட்டளை முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளருமான முகுந்தகஜன் 135 மாணவர்களுக்கு பாடசாலை புத்தக பைகளை அன்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.