நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை கேட்போர் கூடத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையின் ஊடாக 2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் அத்தோடு அத்திட்டங்களின் குறைப்பாடுகளை இனம் கண்டு செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்தார். அதேபோன்று 2023 ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக நீர்வழங்கல் சபையின் அதிகாரிகளினார் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதன்போது அங்கு அதிகாரிகளுடன் உரையாடிய அமைச்சர், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் பல்வேறு அரச துறைசாந்த நிறுணங்களில் பல்வேறு போராட்டங்களில் முன்னெடுத்தென ஆனால் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பொதுமக்களுக்கு உயர்தர சேவை சுத்தமான குடிநீரை வழங்குவதே நமது நோக்கமாக கொண்டு செயற்பட்டது
மேலும் அமைச்சுக்களின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களினதும் அதிகாரிகளினதும் பூரண ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் இந்த இலக்கை அடைய அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்படவேன்டுமென அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
அத்தோடு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கீழ் இயங்கும் தொழில் சங்க பிரதநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார் இதன்போது அவர்கள் எதிர்நோக்கிய சவால்கள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளையும் அமைச்சரிடம் முன்வைத்தனர். அவ்விடயங்கள் தொடர்பாகவும் பரிசிலனை மேற்கொண்டு உரிய தீர்வு எட்டப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கலந்துரையாடலில் நீர்வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.காவின் நிதிச்செயலாளருமான ராமேஸ்வரன், அமைச்சின் செயலாளர், நிர்வழங்கல் சபையின் தலைவர், அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.