13 ஆம் அரசியலமைப்பு திருத்தம் பாகுபாடின்றி முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அதற்காக முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவர் கூறியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பு, இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்க தரப்பில் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை விடுதலை புலிகளுடன் நீண்டகால தொடர்பினை கொண்ட பழ. நெடுமாறனின் தெரிவித்த கருத்தால் மீண்டும் இனவாதம் தோன்றலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது கருத்து உண்மையாக இருந்தாலும் அதன் உறுதிப்பாட்டை இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.