வடக்கு மாகாணத்தில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக ஜப்பானிய அரசாங்கம் நிவாரணத் திட்டத்தின் கீழ் 170 மில்லியன் ரூபாய் உதவித் தொகையை வழங்கியுள்ளது.
நாட்டின் கண்ணிவெடி அகற்றும் திட்டத்திற்கு அதன் தொடர்ச்சியாக ஆதரவளித்து வரும் ஜப்பான், இதுவரை மொத்த உதவித் தொகையாக 43 மில்லியன் டொலர்களுக்கு மேல் வழங்கியுள்ளது.
அந்தப் பணத்தைப் பயன்படுத்தி கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூலை மாதம் வரை 11 ஆயிரத்து 471 சாதாரண கண்ணிவெடிகளும், 161 இராணுவ டாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டுள்ளன.