எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று வரை கிடைக்கப்பெற்ற தேர்தல் முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 1,482 ஆக அதிகரித்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகளில் 1,419 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட விதி மீறல்களுடன் தொடர்புடையது எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 07 முறைப்பாடுகளும் மற்றும் வேறு முறைப்பாடுகள் 56 ம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளமை குறிப்படத்தக்கது.