பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 40 ஆவது போர்வீரர்கள் தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.
அதன்படி, முக்கிய நிகழ்வு இன்று காலை 8 மணிக்கு கட்டுகுருந்த விசேட அதிரடிப்படை பயிற்சி பாடசாலையில் நடைபெற உள்ளது.
இதேவேளை கதிர்காமம், அம்பாறை, அநுராதபுரம் ஆகிய இடங்களிலும் போர்வீரர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
1984 ஆம் ஆண்டு செப்டெம்பர் முதலாம் திகதி, வடக்கு பிராந்தியத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வெடித்ததில் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டதுடன் 11 பேர் காயமடைந்தனர்.
அந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் விசேட அதிரடிப்படையின் போர்வீரர்கள் தினம் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது.