கலேவெல, மகுலுகஸ்வெவ பகுதியில் நபரொருவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரின் கூற்றுப்படி, 119 அவசர தொலைபேசி இலக்கத்தின் மூலம் ஒருவர் தாக்கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டதாகக் கூறி முறைப்பாடு அளிக்கப்பட்டது.
விசாரணையின் போது, அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பாதிக்கப்பட்டவரை, மற்றொரு நபர் மோட்டார் சைக்கிளில் சென்று வழிமறித்து, தாக்கி, பின்னர் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.
இறந்தவர் தேவஹுவ பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக 26 வயதுடைய கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவருடன் நீண்டகாலமாக ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தேக நபர் இந்தக் கொலையைச் செய்துள்ளதாக விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் தம்புள்ளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மகுலுகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














