அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதிக்கான நோபல் பரிசுக்கான வேட்புமனுவை ரஷ்யா வெள்ளிக்கிழமை (10) ஆதரித்தது.
பரிசு அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் இந்த அறிக்கையை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
உக்ரேனில் போரை நிறுத்த ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டுவதாக ரஷ்யா பலமுறை கூறியுள்ளது.
வியாழக்கிழமை (09) வெளியிடப்பட்ட கருத்துக்களில், போர் நிறுத்தத்தை உறுதி செய்வதில் ட்ரம்ப் வெற்றி பெற்றால், கியேவ் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப்பை பரிந்துரைக்கும் என்று உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியமையும் குறிப்பிடத்தக்கது.

















