அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட செலவுக் குறைப்புக்கள் மற்றும் தொழிலாளர் சட்ட மாற்றங்களை எதிர்த்து திங்கள்கிழமை (24) தொடங்கி மூன்று நாட்கள் வேலைநிறுத்தங்களுக்கு பெல்ஜியம் நாட்டின் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது.
இதனால், பெல்ஜியத்தின் பாடசலைகள் மூடப்படும் நிலைகளை எதிர் நோக்கியுள்ள நிலையில் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
வேலைநிறுத்தங்கள் மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றன.
ரயில் சேவைகளும், பொதுப் போக்குவரத்தும் திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தைத் தொடங்குகின்றன.
தேசிய ரயில்வே நிறுவனமான SNCB மூன்றில் இரண்டு ரயில்களை அல்லது சில வழித்தடங்களில் மூன்றில் ஒரு ரயில்களை மட்டுமே இயக்க எதிர்பார்க்கிறது.
பிரஸ்ஸல்ஸை பாரிஸுடன் இணைக்கும் பல யூரோஸ்டார் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை (26) பாடசாலைகள், சிறுவர் காப்பகங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பொது சேவைகள் வேலைநிறுத்தத்தில் இணைகின்றன.
புதன்கிழமை (26) அனைத்து வகைகளையும் உள்ளடக்கிய முழு பொது வேலைநிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
நாட்டின் இரண்டு முக்கிய விமான நிலையங்களான ப்ரூக்செல்ஸ்-சாவென்டெம் மற்றும் சார்லராய் ஆகிய இடங்களில் புதன்கிழமை விமானங்கள் எதுவும் சேவையில் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வேலைநிறுத்தத்திற்கு பெல்ஜியத்தின் முக்கிய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன.
அவர்கள் நாட்டின் கடனைக் குறைப்பதற்கான முயற்சிகள் தொடர்பாக பிரதமர் பார்ட் டி வெவருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.



















